நினைவுகளை கிளறியவை..!

நான் சின்ன வயதாக இருக்கும் போது.. டைப் கிளாஸ் போகும் என் பெரிய அக்காவை பார்க்க எனக்கு வியப்பாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களை மட்டும் டைப் அடித்து வராமல்.. சிவன், கிருஷ்ணர், மலை, இயற்கை காட்சிகள் போன்றவற்றை டைப் அடித்து வருவார்.

அந்த விதவிதமான டைப் ஓவியங்களை ஒரு பெரிய நோட்டில் ஒட்டியும் வைத்திருப்பார். கூடை பின்னுவது, கோலம் வரைவது மட்டுமின்றி, புனைவுகள் எழுதுவதிலும் ஆர்வமிக்கவர் அவர்.

பெரிய அக்கா கதை சொல்லும் அழகே தனி. குரலில் நல்ல ஏற்ற இறக்கம் இருக்கும். அதிகம் அவர் சொல்லுவது நகைச்சுவை கதைகளாக இருக்கும். வெறும் வார்த்தை ஜாலம் செய்ய்யும் மொழி விளையாட்டு கதைகள் அல்ல அவை. அத்தனையும் காட்சிப்படுத்தப்பட்ட கதை.

அந்த அக்காவுக்கு கல்யாணம் நடந்த போது என் வயது பதினைந்து. இன்று இரண்டு வயது வந்த குழந்தைகளின் தாய் அவர். அவரின் இளவயதில் இருந்த கதை சொல்லும் குணம் இன்று இல்லை. அவரின் கல்லூரிக்காலத்துடனே அவரின் துடுக்கதனம், கதை சொல்லுவது எல்லம் குறையத்தொடங்கி இருந்தது.. இன்று சுத்தமாக கதைஇ வாசிப்பு கூட இல்லாமல் இருக்கிறார்.

கடைசியாக அவரை இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்த போது.., “என்னக்கா.. இப்ப எல்லாம் ஒன்னோட குழந்தைகளுக்கு கூட கதை சொல்லுறதில்ல போலிருக்கே. டிவியில காமடி காட்சியில் கூட சிரிக்க மாட்டீங்கிறியேன்னு” கேட்டேன். அவர் விரக்தியாய் ஒரு சிரிப்பை உதிர்த்தார். அந்த சிரிப்புக்கு எனக்கு பொருள் புரியவில்லை. ஆனால்.. முரட்டு குணம் கொண்ட அத்தானுக்கு இது எல்லாம் பிடிக்காது என்று எனக்கும் தெரியும். என்ன செய்ய.. கற்பகமக்காவின் இந்த பதிவு ஏனோ.. எனக்கு சுயத்தை இழந்து வாழும் என் அக்காவை நினைவு படுத்தியது. :(

**

ஒரு காலகட்டத்தில் மடல் வழி தொடர்புகளான பேனா-நட்புகள் எனக்கு நிறைய இருந்தது. இன்றும் என் நண்பர்களில் பலர் இந்த பேனா- நட்பு மூலம் ஏற்பட்டவர்கள் தான். அப்படி ஏற்பட்ட ப்பல நட்புகளில் சிலது மட்டும் குடும்ப நட்பாக மாறி இருக்கிறது. இந்த பதினைந்து வருடங்களில் அப்படி ஏற்பட்ட நட்புகளில் பலரை குறிப்பிட்டு சொல்ல முடியும். இந்த பாலா இன்றும் உயிர்ப்போடு இயங்குவதுக்கு அந்த நட்புகளும் முக்கிய்ய காரணம். அது போல.. வலை உலகிலும் நட்புகள் சாத்தியம் என்பதை இந்த இரண்டு ஆண்டுகளில் உணர்ந்திருக்கிறேன். கிட்ட தட்ட ஒத்த கருத்துடையவர்களை, அல்லது தமிழ் நேசிப்பவர்களை தாயகம் விட்டு பிற இடங்களில் வாழும் போது நட்பு கொள்வது என்பதே சுவாரஸ்யமான விசயம். நிறைய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும். அப்படியான உணர்வை வாசிக்கும் போதே தந்தது துளசியம்மாவின் இந்த பதிவு.

**

மனித மனங்கள் பற்றி யோசிக்கையில் சில சந்தர்ப்பங்களில் வியப்பும், வேதனையும் எனக்கு தோற்றுவிக்கும். எல்லா வகையிலும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர் மேல் பாரத்தை சும்மத்தி விட்டு தப்பிக்கப் பார்க்கும். இப்படி பல விதங்களில் என்னை அலைக்கழிக்கும் இந்த மனிதர்கள் மேல் ஏனோ.. எப்போதும் என்னால் அதிக பட்சமாய் அரைமணி நேரத்திற்கு மேல் கோபமாய் இருக்க முடிவதில்லை. இதோ நிவேதா வின் இந்த எழுத்துக்கள் அப்படியான பல எண்ணங்களை எனக்குள் ஏற்படுத்தியது.

**

திதி செய்ய மனமில்லை
இன்னும் வாழ்கிறாள்
மனதில் அம்மா.

-என்று நான் குறுங்கவிதையாய் எழுதியதும் என் நெருங்கிய நண்பனின் அனுபவத்தைத் தான். அந்த வரிகளில் மூழ்கி.. என் தோள் தட்டாதவர்கள் குறைவு. அம்மா என்ற சொல்.. வெறும் சொல்லாக மட்டும் பார்க்கப்படுவதில்லை என்பதை திடமாக நம்புகின்ற நபர்களில் நானும் ஒருவன்.

அளவுக்கதிகமாய் நேசித்த கணவன் இறந்து போன.. அதே வீட்டில் தானும் இறக்கவேண்டும் என்ற அசட்டு வைராக்கியத்துடன் வாழும் கிழவிகளை நான் பார்த்திருக்கிறேன். பையன்களும், பிள்ளைகளும் சொந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு குடியேறியபின்னும், தனித்து.. தன் கடைசி நாட்களை அதே வீட்டில் எண்ணிக்கொண்டு வாழும் கிழவிகள் இங்கே நிறைய உண்டு.

ஆவி வந்த வீடு என்றெல்லாம் சொல்லபடுகின்ற வழக்கம் இன்றும் தென்மாவட்டங்களில் உண்டு.

சரி.. இது எல்லாம் சொந்த வீட்டுக்காரர்களுக்கு.., நீண்ட காலமாக வாடகை வீட்டில் வாழ்பவர்கள் நிலை..?! கிளைகள் முறிக்கப்பட்டு மொட்டையாய் நிற்கும் மரங்கள் மனக்கண்ணில் தோன்றி மறைகின்றன. வாடகை வீட்டினரை நினைக்கவே சங்கடமாக இருக்கிறது.

புலம் ‘பெயர்க்கப்பட்டவர்’களின் நிலை… எழுத்துக்களினால் சொல்லிவிட முடியாத் துயரமது. நெஞ்சை அடைக்கும் அப்படியான பதிவு இது. மூஊஊஊஊஊத்த பதிவரான சந்திரமதியின்( அப்பாடா.. ம.க.ச-வை ஆரம்பிச்சாச்சு) எழுத்தின் வன்மையை இதில் உணரலாம்.

***

இன்னுமிருக்கு..

யெஸ்.பாலபாரதி இல் பதிவிடப்பட்டது . 7 மறுமொழிகள் »

வந்துட்டோம்ல..!

வணக்கம் நண்பர்களே!

திட்டமிட்டபடி இந்த வாரத்தை ஒழுங்கமைவுடன் கொண்டு செல்லமுடியுமா.. என்பதும் சந்தேகமே! பட்டறைக்கான வேலைகள் கழுத்தை சுற்றி தோளில் கணக்கும் அனகொண்டா போல இறுக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த இடைவெளில் இப்படி அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்து விட்டுப் போகிறேன்.

நூறு பதிவுகளை தொட்டு விட்ட சமயம் பலரிடம் என் பதிவுகளில் பிடித்தவை(!) பற்றி கருத்து கேட்டிருந்தேன். பலர் பின்னாங்கால் பிடறியில் பட ஓடி விட்ட நிலையில்… சிலர் மட்டுமே துணிந்து பொய் சொல்ல வந்தார்கள். அவர்கள் சொன்ன கருத்து இங்கே!

அந்த சமயத்தில் விட்டுப் போய் தன் கருத்தை.. அவரசமாக பதிவு செய்தார் என் செல்ல மகள் ( நான் இவங்களுக்கு சித்தப்பு முறை)

கவிஞர்.தாஜ் இவரை பற்றிய தனி அறிமுகம் தேவை இருக்காது. பிரபலமானவர். ஆனந்த விகடன் நடத்திய ஒரு போட்டியில் சிறந்த கவிதைகளில் ஒன்றாக இவரது கவிதையும் தேர்வானது. காந்திvsபெரியார் என்ற இவரது பதிவு நல்ல பொக்கிசம். உண்மையை இணையத்தில் பதிவு செய்தமைக்கு இவரை பாராட்டலாம்.

கீற்று டாட் காம் தளத்தில் வந்து கொண்டிருக்கும் பெரியாரின் பேச்சுக்கள், தலையங்கம், கருத்துக்கள் இந்த பகுதியில் தான் சேமிக்கப்பட்டிருக்கிறது. பெரியாரின் எண்ணங்களை ஒருங்கு குறியில் பார்க்கவும், படிக்கவும் இந்த சுட்டி பயன்படலாம்.

என் பாசமிகு அண்ணன் ஆதவன் தீட்சன்யா-வின் படைப்புகளை ஒரே இடத்தில் காண இங்கு சொடுக்கவும். இவரைப் பற்றி நான் சொல்லுவதை விட இவரது படைப்புக்கள் சொல்லும் வாசித்துப் பாருங்க!

அடுத்த அண்ணான் அழகியபெரியவன் எழுத்துக்கள் தமிழகத்தில் தனித்த அடையாளம் கொண்டவை. அவற்றை இணையத்தில் சில வாசிக்க கிடைக்கிறது. அதன் தொகுப்பு இங்கே. இவறைப்பற்றியும் தனி அறிமுகம் தேவை இல்லை. படைப்புகள் பறைசாற்றும் இவரைப் பற்றி!

மீண்டும் அடுத்த பதிவில்..

யெஸ்.பாலபாரதி இல் பதிவிடப்பட்டது . 2 மறுமொழிகள் »

பாகச வாரம்

பிள்ளையாரை வேண்டிக் கொண்டு தொடங்கினாலும், பொகச வேலைகளுடன் தொடங்கியதால் அகிலனின் வாரம் முழுமையடையாமலே போய்விட்டது போலும்.. ;-) நிறைய முன் தயாரிப்புகள் இருந்தாலும் பயன்படாமல் இரண்டே பதிவுகள் இட்டு விட்டு நகர்ந்திருக்கிறார் அகிலன். சேமித்து வைத்த சுட்டிகளை, பிறிதொரு சமயம் அவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் வலைச்சர ஆசிரியருக்கு நன்றி கூறுகிறோம்..

அகிலனைத் தொடர்ந்து இந்த வாரம், பா.க.ச வாரம். அகில உலக பா.க.ச தலைவராக நம்மிடையே அறிமுகமாகி இருக்கும் கவிஞர் பாலபாரதி, தான் படித்த, ரசித்த பதிவுகளைப் பகிர்ந்து கொள்ள வருகிறார். வரும் ஞாயிறன்று சென்னையில் நிகழவிருக்கும் பதிவர் பட்டறை நிர்வாகக் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்தாலும், வலைச்சரத்தையும் தொகுக்க வந்திருக்கும் (தல) பாலபாரதியை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்..

வாங்க தல.. பாகச மக்களே, ரெடி, ஸ்டார்ட் மீசிக்

* அறிமுகம் இல் பதிவிடப்பட்டது . 7 மறுமொழிகள் »

பாலபாரதி சொன்னது போல….!!!

அன்பர்கள் அனைவரும் என்னை மன்னித்துவிடவேண்டுகிறேன். வலைச்சரத்தில் எனக்கு ஒரு பொறுப்பான கடைமையைக் கொடுத்தும் அதை சரிவர செய்ய முடியவில்லையே என்கிற கவலையில் இடப்படுகின்ற பதிவு இது.

என்ன செய்ய முதலில் ஒரு தன்னிலை விளக்கம்.

நான் வழக்கமாக ஒரு இணைய உலாவி மையத்தில் எனது இணையம் சார், மற்றம் தட்டச்சிடும் பணிகளை மேற்கொள்வது வழக்கம். பலர் அலுவலக கணிணிகளை தங்களது சொந்த கணிணியாக பயன்படுத்துவது போல நான் அங்கிருக்கும் கணிணியை பயன்படுத்துவதுண்டு. ஆனால் திடீரென்று அந்த மையத்தின் உரிமையாளரது தயார் மதுரையில் இறந்து விடவே. அவர் கடையை ப+ட்டி விட்டு மதுரைக்கு போய்விட்டார்(போகத்தானே வேண்டும்) ஆகவே இந்த வலைச்சர வாரத்துக்கான எனது முன்தயாரிப்புக்கள் அனைத்தும் ப+ட்டப்பட்ட நிலையில் வெளிவரமுடியாமல் சாவியற்றுத் துடிக்கின்றன. இந்த வாரத்தை அமர்க்களப்படுத்தும் திட்டங்கள் இருந்தும் அதையெல்லாம் செய்யமுடியாமல் விதியின் சதி என்னை தடுத்து விட்டது…

இனி விதியின் சதியை மீறி…

இந்த வார வலைச்சரத்தின் முதலாவது தொகுப்பு இது.

01.
இது புல்வெளி. ஈழத்தின் மிக முக்கியமான கவிஞராக கருதப்படுபவரால் நடத்தப்படுகின்ற வலைப்பூ இது. தமிழகத்தினால் ஆலவட்டம் போடப்பட்டு ஆராதிக்கப்பட்டு வருகின்ற ஈழத்துக் கவிஞர்களில் இவர் அடங்கவில்லை என்றாலும் ஈழத்தில் அடுத்த தலைமுறைக் கவிஞர்களின் வளர்ச்சியில் பெருமளவு ஆதிக்கத்தையம், அவர்களது வளர்ச்சிக்கான ஊக்கத்தையும் விளங்குகின்ற மூத்த கவிஞர் இவர். அவர்தான் கருணாகரன் இரண்டு கவிதைத் தொகுதிகள் தொகுதிகள் ஏற்கனவே வந்திருக்கின்றன.

இப்போதும் தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகின்ற. இவர் உலகம் முழவதிலும் இருந்து வெளிவரும் தமிழ் நாளேடுகள் சஞ்சிகைகளிலும் அரசியற்பத்திகளும் விமர்சனக்கட்டுரைகளும் எழுதி வருகிறார். அவற்றில் சிலவற்றை இங்கேயும் இட்டு வைத்துள்ளார்.

02.
அடுத்தது பஹீமா ஜகான் கவிதைகள். ஈழத்தில் புதிய தலைமுறை பெண் கவிஞர்களில் மிக முக்கியமானவர். ஒரு ஆசியயையாக இலங்கையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் ஆசிரியப்பணியில் மூழ்கிக் கிடப்பதனால் வலைப்பூக்களில் அதிக நேரம் செலவிடுவதில். மிகவிரைவில் தமிழகத்தில் இருந்து பனிக்குடம் வெளியீடாக இவரது தொகுதி ஒன்று வெளிவரஇருக்கிறது. கவிதையால் உங்களை திணற அடிக்க இந்த வலைப்பூ தயார் உள்ளே போங்கள் பஹீமா ஜகான் கவிதைகளின் நனைய.

03.
இது காற்று. புல்வெளிக்குப்போய்ட்டு காத்து வாங்கலன்னா எப்புடி.நேற்றைய காற்று என்கிற வானொலி நிகழ்ச்சி மூலம் இலங்கையில் பிரபலமான வானொலியாளர். அதைவிடவும் மிக நல்ல கவிஞர். அவர்தான் இலங்கையில் நன்கு அறியப்பட்ட கவிஞர் மற்றும் வானொலியாளர் யு.எல் மப்றூக். அதைவிட பத்திரிகைகளிலும் தொடர்ச்சியாக பத்திகள் எழுதிவருகிறார். இவரது கவிதைகளும் உங்களை ஆச்சரியப்படுத்தும். நிச்சயம்.

இன்னும் கொஞ்சம் வலைப்பூக்களின் தொகுப்பு இருந்தது. ஆனால் எல்லாம் இப்போது கைவசம் இல்லை. அதைவிட இவர்களுடைய எழுத்துக்களில் இருந்து சிலதை இங்கே இடவும் எண்ணியிருந்தேன். பாமினி அல்லாத தமிங்கிலீசில் தட்டச்சிடும் சிரமம் என்னை வருத்துகிறது.மன்னிக்கவும் நண்பர்களே.

இனி தலைப்புக்கு காரணம்.

நான் வலைச்சரத்தின் முதல் போட்ட பதிவிற்கு பாலபாரதி பின்னூட்டம் போட்டிருந்த பா.க.ச தலைவர் இப்படி சொல்லியிருந்தார்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said…
அடப்பாவீ… ஒனக்கு ஒரு பொருப்பான வேலையைக் கொடுத்தா… அங்கன போயும் சங்கத்தை திறப்பேன்னா.. என்ன அர்த்தம்…?!

கடைசியா சங்கத்தை திறந்தது தான் மிச்சம் ஒழுங்கா ஒரு பதிவு போட முடியல. அந்த வருத்தத்தில தான் இப்படி ஒரு தலைப்பு வைச்சேன். (நல்லா குழப்புறீங்களே எண்டு நினைக்கிறியளோ…)

யக்கா பொன்ஸ் அவர்களிடம் ஒரு கேள்வி யக்கா நான் எப்ப அமானுஷ்ய கதைகள் எழுதினேன்!!!!!!!

த.அகிலன் இல் பதிவிடப்பட்டது . 1 மறுமொழி »

பொன்ஸின் தும்பிக்கையால் தூக்கிவரப்பட்டு…

நண்பர்களிற்கு வணக்கம் என்னதான் வலைப்பூவில் எழுதிக்கிழித்தாலும் உங்களில் நிறையப்பேருக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் வலைப்பதிவுகளை விட வலைப்பதிவர் சந்திப்புக்கள் மூலமாக கொஞ்சப்பேருக்கு அறிமுகமாயிருப்பேன் என்று நினைக்கிறேன்.

நான் படித்த இரண்டாமாண்டு சைவநெறி புத்தகத்தில் முதலாம் பாடமாக ஒரு கதை இருந்தது. யாரோ இரண்டு நாயன்மார்களோடு ( பேர் மறந்து போச்சுங்க) சேர்ந்து கொண்டு ஒளவைப்பாட்டி கைலாயத்திற்கு போகவிரும்பியதாகவும். அதற்காக ஒவைப்பிராட்டி வழக்கமாக தான் பூசை செய்கிற பிள்ளையாருக்கு அவசரஅவசரமாக பூசை செய்துவிட்டு போக வெளிக்கிட்டாராம். உடனே பிள்ளையாருக்கு விளங்கிவிட்டதாம் ஒளவையார் அவசரமாக பூசை செய்கிறார் என்று. (மோதகம் சைசில் வழமையை விட சின்னதாயிருந்ததை வைத்து கண்டு பிடித்திருப்பாரோ) உடனே அவர் ஒளவையிடம் கேட்டிருக்கிறார் பாட்டி ஏன் அவசரப்படுகிறாய் என்று. ஒளவையும் காரணத்தை சொல்லியிருக்கிறார். உடனே பிள்ளையார் இதென்ன பிரமாதம் நீ வழமை போல மோதகத்தை பெரிசாப்பண்ணு சீ பூசையைப் பெரிசாப்பண்ணு நான் உன்னை வேகமாக கொண்டு போய் சேர்க்கிறென் என்று சொல்லி பூசை முடிந்ததும் ஒளவையை தும்பிக்கையால் தூக்கி கைலாயத்தில் வைப்பாராம் என்று அந்த கதை முடியும். ஏ4 அளவைவிட சற்றே பெரிய அளவில் இருக்கும் அந்த புத்தகத்தில் ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்தில் இருக்கும் கைலாயத்திற்கு தும்பிக்கையில் ஒளவைப்பாட்டியை அலற அலற இல்லை இல்லை அலேக்காக பிள்ளையார் தூக்கி வைக்கும் காட்சியும் வரைந்திருப்பார்கள்.

நண்பர்களே இந்த கதையை இவ்வளவு வேலை மினக்கெட்டு இங்கே எழுதுவதன் நோக்கம் என்ன. எங்கோயோ தொலைவில் கனவு கண்டு கொண்டு (அதாங்க தூங்கிக்கொண்டு ) இருந்த என்னை தனது தும்பிக்கையால் தூக்கிவந்து வலைச்சரத்தில் வைத்து விட்டார் பொன்ஸ் அக்கா. நேற்றே அவர் வரச்சொல்லியிருந்தும் நான் அதிகமாக தூங்கிவிட்டதால் வரமுடியவில்லை. அதனால் தான் தனது தும்பிக்கையால் ஒரு தட்டு தட்டி இன்று தூக்கி வந்திருக்கிறார்.

என்னைப்பற்றி நானே சொல்வதற்கு வேற எதுவும் இருப்பதாய் நினைக்கவில்லை எதற்கும் இருக்கட்டும் என்று சினேகிதி இங்கே வலைச்சரத்தில் எழுதியதையே மறுபடியும் படித்து பார்க்கு மாறு வேண்டுகிறேன். வரும் நாட்களிலும் எனது பொ.க.ச பதிவுகள் தொடரும் மன்னிக்கவும்(ஹி ஹி ஹி) வலைச்சரப்பதிவுகள் தொடரும். முதல் முறையாக பாமினியில் அல்லாமல் தமிங்கிலீசில் தட்டச்சிடுவதால் எழுத்துப்பிழைகளை பெரிய மனசு பண்ணி மன்னிக்கவும்….

த.அகிலன் இல் பதிவிடப்பட்டது . 14 மறுமொழிகள் »

இந்த வாரம்….

வரிசையாக நான்கு இடுகைகள் இட்டு வலைச்சரத்தை கோர்த்திருக்கிறார் வினையூக்கி. பல நல்ல இடுகைகள் கொடுத்தாலும் சரியாக தொகுத்து, பாக்கேஜ் செய்யவில்லையோ என்று தோன்றுகிறது.. இன்னும் வகை பிரித்து விட்டிருந்தால் சிறப்பு கவனம் பெற்றிருக்கக் கூடிய சுட்டிகள்..

அடுத்ததாக வலைச்சரம் விட வருபவரும் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் – கனவுகளின் தொலைவில் மனதை உருக்கும் நடையில் எழுதும் அகிலன். அகிலன் கனவுகளில் கொஞ்சத்தை நம்மோடும் பகிர்ந்து கொள்ள வருகிறார்….

* அறிமுகம் இல் பதிவிடப்பட்டது . 4 மறுமொழிகள் »

தமிழ்மண விவாதக்களம் சில சுவாரசியமான விவாதங்கள்

தமிழ்மண விவாதக்களத்தில் நடைபெற்ற சில சுவாரசியமான விவாதங்கள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிய விவாதம் —>
கடவுள்

கோயில்களின் தற்போதைய நிலைப்பாடு, அது உண்மையிலேயே கடவுள் வீற்றிருக்கும் இடமா? — >
கடவுளின் இருப்பிடமா

பரம்பரை அரசியல் மன்னராட்சியில் மட்டுமன்றி, மக்களாட்சியிலுமா —>
வாரிசு அரசியல் உங்கள் பார்வை என்ன?

சாதிகளின் கூட்டமைப்பே சமுகமா —- >
சாதிதான் சமூகமா

ஆண் பெண் பாகுபாடுகள் பற்றி —- >
பெண்ணீயம் ஆண் பித்தளை

வினையூக்கி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஆவிப்பதிவுகள்

வலைப்பதிவுகளில் அடிக்கடி அண்டார்டிகா ஆவி, அமிஞ்சக்கரை ஆவி , பட்டிக்காட்டு ஆவி, படிச்ச ஆவி என கும்மி பின்னூட்டங்களைப் பாத்திருப்பீங்க..அந்த ஆவி அனானிங்க எல்லாம் ஒரு க்ருப்பாதான் திரியிறாங்க
அதுங்களுக்கு(அவங்களுக்கு?!!!)
தலைவர் — > ஆவி அண்ணாச்சி
பொது செயலாளர் —> ஆவி அம்மணி

உண்மையில் பேய், அமனூஷ்ய விசயங்கள் இருக்கிறதா என்பதைப் பற்றி தமிழச்சி விரிவாகவே இரு பதிவுகள் இட்டு உள்ளார்.

பாகம் 1
பாகம் 2

பாரா-நார்மல் விசயங்களைப் பற்றிய ஒரு ஆங்கில வலைப்பதிவு

வினையூக்கி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

நண்பர்களின் சில பதிவுகள்

இந்த வாரம் வலைச்சரம் அமைக்க வாய்ப்பளித்த பொறுப்பாசிரியருக்கு நன்றிகள்.

வலைச்சரத்தில் முதல் பதிவாக, சில சுவாரசியமான பதிவுகளின் சுட்டிகளின் தொகுப்பு இதோ

தமிழ்வலையுலகுக்கு புதியவரான பூர்ணிமாவின்
வலைப்பதிவினில் உலவிக் கொண்டிருக்கும்பொழுது அவரின் இசைப்பதிவுகளில் அவரின் குரலில் பாடல்கள் சிலவற்றை பதிந்துள்ளார். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த
மாயாவி படத்திலிருந்து
“கடவுள் தந்த அழகிய வாழ்வு, உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடி வாழ்த்துப் பாடு” என்ற பாடல் இதோ

நண்பர்களிடையே ஏற்படும் இட ஒதுக்கீடு பற்றிய வாதப் பிரதிவாதங்களின் போதும், என் நண்பர்களுக்குப் நான் பரிந்துரைக்கும் ஓசை செல்லாவின் இட ஒதுக்கீடு பற்றிய ஆங்கில வலைத்தளம்.

நான் வலைப்பதிந்த ஆரம்பக் காலங்களில், படித்துவிட்டு என்ன ஒரு அருமையான கதை என்று வியந்த சிறுகதை ஆயிரத்தி முன்னூறு ரூபாய் ஒரு சிறுகதைக்கான இலக்கணத்தை இக்கதையில் பார்க்கலாம். இந்தக் கதையை எழுதிய நண்பரும் சக வலைப்பதிவருமான முத்து(தமிழினி) பிற்பாடு கதைகள் ஏதும் அதிகம் எழுதுவதில்லை. முத்து(தமிழினி) யிடம் இந்த வலைச்சரத்தின் வாயிலாக ஒரு விண்ணப்பம், கதைப் பக்கம் மீண்டு(ம்) வாங்க.

என் பேய்க்கதைகளுக்கு மிகப்பெரும் இன்ஷ்பிரேஷன் நாமக்கல் சிபியின் இந்த
அமானுஷ்ய வாசகி தொடர்கதை இதைப்படித்த பிறகுதான் எனது பயங்களின் வடிகாலாக பேய்கதைகளை எழுத ஆரம்பித்தேன்.

எப்படித்தான் பணிச்சூழலிலும் நேரம் கிடைக்கிறதோ என்று நான் அடிக்கடி வியப்பவர்கள், மா.சிவக்குமாரும், டி.பி.ஆர் ஜோசஃப் சாரும். மா.சிவக்குமாரின் பொருளாதரக் கட்டுரைகளின் தொகுப்பு <a href=” http://masivakumar.googlepages.com/annotated
-economics.html”>இங்கே சிவா வின் மற்ற துறை சார்ந்த பதிவுகளும் போற்றுதலுக்குரியவையே

டி.பி.ஆர் ஜோசஃபின் <a href=”http://ennulagam.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BE.%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%
8D”>திரும்பிப்பார்க்கிறேன் ஒரு அருமையான அனுபவத்தொடர்கட்டுரை புத்தகமாக வெளிவரும்போது நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயம் இல்லை.

தொடரும்.

வினையூக்கி இல் பதிவிடப்பட்டது . 1 மறுமொழி »

என் கதைகளில் சில வலைச்சரமாக

இந்த இரண்டு வருடத்தில் வலைப்பதிவில் நான் நாற்பது கதைகளுக்கு மேல் எழுதியிருந்தாலும் வலைச்சரத்தில் கட்டுவதற்கு சில கதைகள் மட்டுமே தேறுகிறது.

காதல் கதைகள், அமானுஷ்ய கதைகள் எழுதிக் கொண்டிருந்தக் காலத்தில், பொழுதுபோக்கு அம்சம் மட்டும் இருப்பது கதை இல்லை, அதை தாண்டி ஏதாவது ஒரு கருத்து இருக்கவேண்டும் என்று நண்பர்கள் கடிந்து கொண்ட பிறகு எழுதிய கதை நானும் கடவுள்களும் நண்பர்களால் ஓரளவுக்குப் பாராட்டைப் பெற்றக் கதை இது என்று சொல்லலாம்.

அங்கீகாரம், இது மட்டும் இல்லை என்றால் மனிதன் எந்த புது முயற்சியும் எடுக்காமல் அப்படியே ஆதி மனிதனாகவே இருந்திருப்பான். இணைய இதழான பூங்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிகப்பட்ட கதை ஒரு ஞாயிற்றுக்கிழமை சிக்ஸ்த் சென்ஸ் பாதிப்பில் அமைந்துள்ளது என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் பலக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் பாராட்டப்பட்டது.

தேன்கூடு போட்டியில் வாசகர் வாக்குகளில் இரண்டாமிடம் பெற்ற மரணம் மாபெரும் விடுதலை என்றக் கதை.
பரிசு கிடைக்காவிட்டாலும் கூட அதிக பேரினால் பார்வையிடப்பட்ட என்னுடைய கதை இதுதான்.

Agnostic மனப்பான்மையில் எழுதப்பட்ட

வெங்கடாஜலபதிக் கோவில் என்ற இந்தக் கதை நான் எழுதியவைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதனுடைய sequel ஆக எழுதப்பட்டக்கதை

கோவில் பிரசாதம்

தொடரும்

வினையூக்கி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »
Follow

Get every new post delivered to your Inbox.